மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது. இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை. மரகதம் சூரிய மண்டலத்தின் முக்கிய கிரகமான புதனுடன் தொடர்புடையது . அவர் பச்சை நிறத்தையும் ரத்தின மரகதத்தையும் குறிக்கிறார். அவர் வணிகர்களின் கடவுள் மற்றும் வணிகர்களின் பாதுகாவலர் ஆவார். அவர் ரஜஸ் குணத்தைச் சேர்ந்தவர்.
தேவலோகத்தில், 7 மரகத லிங்கத்தை வைத்து இந்திரன் வழிபாடு செய்ததாக புராணங்கள் சொல்லப்படுகிறது. இந்திரனுக்கு நிகரான செல்வ வளம் கிடைக்க, ஆரோக்கியம் கல்வி, உத்தியோகத்தில் சிறக்க, வியாபாரத்தில் பெரிய அளவில் முன்னேற மன அமைதி கிடைக்க, இந்த மரகத லிங்கத்தை நாமும் வழிபாடு செய்யலாம். பூலோகத்தில் வாழும் மக்களுக்கும் இந்த மரகத லிங்கத்தின் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், மக்கள் இந்த மரகத லிங்கத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், முசுகுந்த சர்க்கரவர்தி, இந்திரனை நோக்கி தவம் செய்து, அந்த ஏழு மரகத லிங்கத்தையும் கொண்டு வந்து பூலோகத்தில் பிரபலம் வாய்ந்த சிவன் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புராண கதைகள் கூறுகின்றது. அந்த வரிசையில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாய்மூர், ஆகிய ஏழு இடங்களில் இந்த மரகத லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.
இன்றளவும் இந்த திருத்தலங்களுக்கு நீங்கள் சென்றால் மரகத லிங்கத்தை தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரகதலிங்கம் எந்த இடத்தில் எல்லாம் இருக்கிறதோ, அந்த இடம் பிரபல்யமாக இருக்கும். அந்த இடம் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலையில் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் சிலையும் மரகதகல்லால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சோமவார பிரதோஷம். சிவபெருமானுக்கு உரிய இந்த நன்னாளில் மிக மிக சக்தி வாய்ந்த மரகத லிங்கத்தின் சிறப்புகளை பற்றி காணலாம்.
மரகத லிங்கத்தின் சிறப்புகள்:
- மரகத லிங்கம் பச்சை நிறத்தில் இருக்கும்.
- மரகதம் ஒளிரும் தன்மையுடையது.
- மரகத லிங்கத்தில் பால், நீர் போன்றவற்றை கொண்டு அபிசேகம் செய்யலாம்.
- மரகத லிங்கத்தை வழிபடுவதால், சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெறலாம் என நம்பப்படுகிறது.
- மரகத லிங்கம் உள்ள சிவாலயங்களை வழிபாடு செய்தால், மனதில் நினைத்த காரியம் நடக்கும் என நம்பப்படுகிறது.
- புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கத்தை நாம் வணங்கி வர நம் மனக்குறைகள் நீங்கி நாம் நினைத்த வரத்தைப் பெறலாம்.
- கல்வி, ஆரோக்கியம், அரசாங்க பதவிகள் போன்ற யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம்.
- மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில் மரகத லிங்கத்தை வணங்கி வழிபட்டால் வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்.